search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரசைவாக்கம் ஜவுளிகடை"

    • புரசைவாக்கத்தில் மூடப்பட்டுள்ள ஜவுளிக்கடையின் வெளிப்புர கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.
    • கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த துணிக்கடை கடந்த ஓராண்டாக மூடி கிடக்கிறது.

    3 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் தளத்தில் துணிகடையும், 2-வது தளத்தில் அலுவலகமும் செயல்பட்டு வந்தன. 3-வது தளத்தில் வீடு ஒன்று இருந்தது.

    இந்த கட்டிடம் பழமையானதாக இருந்ததால் முதல் மாடியில் இருந்து 3-வது மாடி வரை மூடியே உள்ளது. தரைதளத்தில் மட்டும் 4 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை மூடப்பட்டுள்ள ஜவுளிக்கடையின் வெளிப்புர கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.

    நடைபாதையில் நடந்து சென்ற பெண்கள் மீது விழுந்தது. இதில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி, பரிமளா ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்தனர். இந்த இருவரும் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பழமையான கட்டிடத்தின் உரிமையாளர் பெயர் அலிபாய் என்பதும். இவர் அமெரிக்காவில் வசித்து வருவதும் தெரியவந்து உள்ளது. மாங்காட்டை சேர்ந்த முகமது அன்வருதீன் என்பவர் கட்டிடத்தை பராமரித்து வந்துள்ளார்.கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×